நீலநிற எரிமலை !!
நீலநிற எரிமலை !!
🌋 நம் அன்றாட வாழ்வில் புதுப்புது ஆச்சரியங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
🌋 எரிமலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எரிமலை வெடித்து சிவப்பு நிறத்தில் வெளிவரும் லாவா குழம்புகள்தான்.
🌋 இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலை வெடித்து வெளிவரும் லாவா குழம்பின் நிறம் எது என்று தெரியுமா? அதைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்..
🌋 பல எரிமலைகளை கொண்ட நாடுகளில் இந்தோனிஷியாவும் ஒன்று.
🌋 இந்தோனேஷியா நாட்டில் அமைந்துள்ள ஜாவா தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது கவா இஜென் (Kawah Ijen) எரிமலை.
🌋 பார்க்க வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தாலும், இது நச்சுத்தன்மை கலந்த புகையை விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
🌋 ஆனால் மலையேறும் ஆர்வலர்கள், முகத்தில் துணியைக் கட்டி மலைமேல் ஏறி நீலநிறக் கற்களை சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
🌋 இந்த எரிமலை விடும் நீலநிற நெருப்புப் பிழம்பு இரவில் மட்டுமே தெரிவதாக கூறுகின்றனர்.
🌋 இந்த எரிமலையின் முகப்புக்குள் ஒரு மிகப்பெரிய ஆசிட் ஏரி (Crater Lake) இருப்பதாகவும், இது நீல ஏரி எனவும் அழைக்கின்றனர்.
🌋 இந்த ஏரியில் இருக்கும் ஆசிட்டின் PH மதிப்பு 0.5. அதாவது நமது கார் பேட்டரிகளில் இருக்கும் ஆசிட் போன்றது.

🌋 மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொடர்ச்சியாக உடலின் மேல் படுவதால் பாதிப்புகள் நிகழ்வதாக கூறுகின்றனர்.
🌋 இந்த ஏரிக்கு அருகில்தான் பெரும்பாலான கந்தகத் தாதுக்கள் இருக்கின்றன எனவும், இத்தகைய அபாயங்களைக் கொண்ட இஜென் எரிமலைச் சுரங்கமானது மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.
🌋 மேலும், பகல் நேரங்களில் இந்தப் பகுதியின் வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
🌋 எரிமலையின் முகப்புப் பகுதியில் கண்ணைக் கவரும் வகையில் தோன்றும் நீலநிற தீ சுவாலைகள்தான் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.
Comments
Post a Comment