The King and Three Ministers




 The King and Three Ministers


Once there lived a clever king, who wanted to appoint a new chief minister for his kingdom. He decided to test the wisdom of his three ministers and wanted to choose one among them as his new chief minister.

He called all three ministers to his chamber and said, I want all three of you to bring as many young animals from the forest. One day has been allotted for this task for everyone. The king wanted to test how each of them thought.

Soon, all the three ministers went to many forests. One day two ministers brought five young elephant calves, two bear cubs and two tiger cubs. Third Minister returned empty handed. The king asked about that to him. The third minister replied, King! These animals are too young to be separated from their mothers. Their mothers also would miss them terribly. I did not have the heart to do this.

The king said, I am glad you were so thoughtful about these animals. I wanted to test the three of you. Because of the third minister's kind gesture, the king declared him to be the new chief minister of his kingdom.

Moral: Positive thoughts and positive actions lead to positive results.





அரசரும் மூன்று அமைச்சர்களும்

புத்திசாலி அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், தன் ராஜ்ஜியத்திற்கு ஒரு புதிய முதலமைச்சரை நியமனம் செய்ய விரும்பினார். அவரது மூன்று அமைச்சர்களின் அறிவை சோதித்து, புதிய முதலமைச்சராக அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்பினார்.

அரசர் மூன்று அமைச்சர்களையும் தனது அறைக்கு அழைத்து, நீங்கள் காட்டில் இருந்து பல இளம் விலங்குகளை கொண்டு வர வேண்டும் என்றார். இந்த பணிக்காக உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நாள் தருகிறேன் என்று கூறினார். அரசர், அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதை சோதிக்க விரும்பினார்.

விரைவில் மூன்று மந்திரிகளும் பல காடுகளுக்கு சென்றனர். ஒரு நாள் இரண்டு அமைச்சர்கள் ஐந்து யானை கன்றுகள், இரண்டு கரடி குட்டிகள் மற்றும் இரண்டு புலி குட்டிகளைக் கொண்டு வந்தார்கள். மூன்றாவது மந்திரி வெறுங்கையுடன் வந்தார். அரசர் வெறும் கையுடன் வந்ததற்கான காரணத்தை மூன்றாவது அமைச்சரிடம் கேட்டார். அதற்கு, மூன்றாவது மந்திரி, அரசே! இந்த இளம் விலங்குகள் அவற்றின் தாயிடம் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு சிறியவை. அவற்றின் தாய்களும் அவைகளை இழந்து வாடும். இதை செய்ய என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்று பதிலளித்தார்.

அரசர், நீங்கள் இந்த விலங்குகளை பற்றி மிகவும் யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்கள் மூன்று பேரையும் சோதித்து பார்க்க விரும்பினேன். மூன்றாவது அமைச்சரின் அன்பான செயலின் காரணமாக, அரசர் அவரை தனது ராஜ்ஜியத்தின் புதிய முதலமைச்சராக அறிவித்தார்.

நீதி : நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box