கடலில் ஓர் நீர்வீழ்ச்சி..!
கடலில் ஓர் நீர்வீழ்ச்சி..!
🌊 நீர்வீழ்ச்சி என்றாலே அனைவரும் குதூகலமாக இருப்பார்கள். இறைவன் நமக்கு அளித்த இயற்கைக் காட்சிகள் எண்ணற்றவைகள் இருக்கின்றன. அவ்வகையில் இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்களில் ஒன்று தான் நீர்வீழ்ச்சி.
🌊 அதிசயம் நிறைந்த பேரழகு கொண்ட இயற்கைக்கு பெருமிதமாய் நீர்வீழ்ச்சிகள் விளங்குகின்றன. முக்கியமாக மலையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியைக் காண்பது கண்ணுக்கு இன்பமாக இருக்கும்.
🌊 ஒரு சில நீர்வீழ்ச்சிகளில் இருந்து விழும் தண்ணீர் மூலிகையாகவும் நம் உடலுக்கு நன்மையைத் தருவதாகவும் இருக்கின்றன. மலைகளில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் இறைவனின் படைப்பில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
🌊 ஆனால் கடலில் ஓர் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்று சொன்னால் நமக்கு புரியாத புதிராகவும், வியக்கத்தக்க விஷயமாகவும் இருக்கிறது. கடலுக்குள் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
எங்கு அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி?
🌊 இவை இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரீசியஸ் தீவு அருகே ஆழ்கடலில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் புகைப்படக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
🌊 உலகில் பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடுத்தப்படியாக பெரிய கடலாக விளங்குவது இந்தியப் பெருங்கடல்தான். இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரீசியஸ் அருகே கடலில் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சி உருவாகக் காரணம் :
🌊 இந்த தீவில் கடலோரத்தில் இருக்கும் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாகத்தான் நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.
🌊 இதன் அதிசயம் என்னவென்றால் இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக கழுகுப்பார்வையுடன் மிகவும் கூர்மையாக உற்றுப்பார்த்தால் காணமுடியும். இதை பார்கும்போது நம்முடைய கண்கள் நொடியில் பிரமித்துப் போகும்.
🌊 தீவின் கடற்கரையொட்டிய பகுதியில் நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சி தோற்றம், உண்மையில் மாயமான அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் காண்பதற்கு வியப்பாகவும் இருக்கிறது.
Comments
Post a Comment