அதிசயங்களும்... மர்மங்களும் நிறைந்த.... சஹாரா பாலைவனம்..!
அதிசயங்களும்... மர்மங்களும் நிறைந்த.... சஹாரா பாலைவனம்..!
👀 பாலைவனம் என்று சொன்னாலே கடுமையான வெயில், பரந்த மணல் பரப்பு, வறண்ட நிலப்பகுதி, கள்ளிச்செடிகள் இருப்பது மட்டுமே நம் நினைவிற்கு வரும்.
👀 காலநிலைக்கு ஏற்ப பல்வேறு வியக்கத்தக்க நிகழ்வுகளும் பாலைவனங்களில் நடக்கின்றன. இந்த பூமியில் இயற்கை நமக்கு அளித்த படைப்புகளில் ஒன்றாக பாலைவனத்தையும் கூறலாம்.
👀 உலகில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் மறைந்திருக்கின்றன. ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மையான விஷயம் ஆகும்.
👀 உங்களில் யாருக்கும் தெரியாத, நம்ப முடியாத மர்மங்களும், அதிசயங்களும் நிறைந்த எருதின் கண் போல அமைந்திருக்கும் விசித்திரமான நில அமைப்புகளைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
எங்கு அமைந்துள்ளது இந்த விசித்திரமான நிலம்?
👀 ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனங்களில் ஒன்றாகும். இப்பாலைவனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத ஒரு மர்மமான நிலவியல் உருவாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
👀 தெற்கு சஹாரா பகுதியில் ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளில் மூரித்தானியா என்ற நாட்டில் அமைந்துள்ளது Eye of Sahara எனும் பாலைவனம் ஆகும்.
👀 இதன் உருவாக்கத்தினை ஆராய்ச்சியாளர்களால் கூட முழுமையாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.

👀இந்த நில அமைப்பை வானில் இருந்து பார்க்கும்போது பல வட்ட வடிவமான தோற்றங்கள் தெரியும். இது பார்க்க கண் போலவே இருப்பதால் இதனை சஹாராவின் கண் என்று கூறுகிறார்கள்.
👀 ஒரு காலத்தில் சஹாராவின் கண் பகுதி உள்ள இடத்தில் பூமியின் மேலோடு அடுக்கு குவிமாடம் (dome of layers of the Earth′s crust) இருந்துள்ளது.
👀 'சஹாரா கண்" ஆனது ஒரு தாக்கத்தால் உருவான பள்ளமாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நம்பமுடியாத இயற்கையானதாகவும், மிகவும் சிக்கலான ஒரு உருவாக்கம் என்று கூறுகிறார்கள்.
சஹாரா கண் உருவான விதம் :
👀 மகா கண்டமான பாஜ்சியா டெக்டோனிக் பலகை நகர்வு மூலம் பிரிக்கப்பட்ட (இப்போது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) அதே சமயத்தில்தான் இந்த கண் போன்ற நில அமைப்பு உருவாகியுள்ளது.
Comments
Post a Comment