பச்சை மணல் கடற்கரை !!
பச்சை மணல் கடற்கரை !!
🏖 பொதுவாக கடல்கள் நீல நிறத்திலும், நீர் உப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும்...
🏖 கடல் நீர் தெளிவாகவும் காணப்படும். அதுமட்டுமில்லாமல் கடற்கரையில் இருக்கும் மணல் லேசான தங்க நிறத்தில் காணப்படும்.
🏖 ஆனால் ஒரு சில கடல்கள் நம் சிந்தனைக்கும் எட்டாத வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துமாறு அமைந்துள்ளது...
🏖 கடல் என்றால் நீர், மணல் நிறைந்த இடம் தானே... இது தவிர வேறு என்ன ஆச்சரியம் இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதல்லவா?
🏖 ஆம்... கடலில் நாம் நினைக்க முடியாத வகையில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்து காணப்படுகிறது...
🏖 அப்படி ஒரு கடற்கரையைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்...

எங்கு இருக்கிறது?
🏖 ஹவாய் தீவில் அமைந்துள்ள கடற்கரைதான் நம்மை அதிசயக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கிறது.
🏖 இக்கடற்கரை பப்பாகோலியா கடற்கரை (Papakolea Beach) என அழைக்கப்படுகிறது.
🏖 இந்த கடற்கரையில் உள்ள மணல்கள் பச்சை நிறத்தில் காணப்படுகிறது...
🏖 உலகிலேயே பச்சை நிறத்தில் காணப்படும் மணல்களை கொண்ட கடற்கரை இதுதான் என்று கூறப்படுகிறது.
🏖 இந்த கடலை முதலில் காணும்போது ஏதோ பச்சை பாசிகள் படர்ந்த இடமாக தோற்றமளிக்கிறது...
🏖 ஆனால், இதன் உண்மையான தோற்றம் பச்சை நிறத்தில் காணப்படும் மணல்கள்தான்.

என்ன காரணம்?
🏖 இந்த கடற்கரையில் உள்ள மணல்கள் மட்டும் ஏன் பச்சை நிறத்தில் காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் இங்கு அமைந்துள்ள எரிமலையில் இருந்து வெளிவரும் ஒரு வகையான பச்சை நிற கனிமங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
🏖 இதனாலேயே இந்த கடற்கரைக்கு பச்சை நிற கடற்கரை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
🏖 நாம் என்னதான் செயற்கை முறையில் பல நிகழ்வுகளை செய்தாலும் இயற்கையாக தோன்றும் அதிசயம் மற்றும் ஆச்சரியத்திற்கு எதுவும் ஈடு இணையாகாது என்பதே உண்மை.
Comments
Post a Comment