ஒலிப்பாறைகள் !!




ஒலிப்பாறைகள் !!



🎶 கற்களை ஒன்றோடு ஒன்று உரசினால் தீ வெளிப்படும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்...

🎶 ஆனால் அந்த பாறைகளில் இருந்து ஒலி ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

🎶 ஆம்... கரடு முரடான பாறைகளில் இருந்து தோன்றும் ஒலியைப் பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்...

🎶 பென்சில்வேனியாவில் (Pennsylvania) உள்ள ஒரு குன்றின் உச்சியில் விசித்திரமான பாறைகளை கொண்ட ஒரு இடம் அமைந்துள்ளது.

🎶 அங்குள்ள பாறைகளை நாம் உரசினாலோ அல்லது பாறைகளில் சுத்தியல் வைத்து அடித்தாலோ ஓசை எழும் என்று கூறுகின்றனர்.

🎶 அங்குள்ள பாறைகளில் இருந்து வரும் வித்தியாசமான ஒலியின் காரணமாக அவ்விடம் ஆச்சரியம் நிறைந்த இடமாக விளங்குகிறது.
பாலைவனம் போல் காட்சியளிக்கும்... நீருள்ள மணல் திட்டுகள்!!
🏖 பாலைவனம் என்றால் வெயிலும், மணலும் அதிகமாக காணப்படும்... மேலும் பாலைவனத்தில் கானல் நீர் தெரியும்...

🏖 பாலைவனம் போல் காட்சியளித்தாலும் அதில் நீர் நிறைந்து காணப்படும் ஒரு இடம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

🏖 பாலைவனம்... ஆனால் நீர் இருக்கும் ஒரு ஆச்சரியம் நிறைந்த ஒரு இடத்தைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

🏖 பிரேசிலில் அமைந்துள்ள லென்கோயிஸ் மரன்ஹென்ஸ் தேசிய பூங்காவில் (Lencois Maranhenses National Park) அமைந்துள்ள இடம்தான் பாலைவனம் போல் காட்சியளிக்கும் நீருள்ள மணல் திட்டுகள்.


🏖 ஆனால் இது பாலைவனம் இல்லை என்பதே உண்மை. இது இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்றாகும்.

🏖 இதில் என்ன அதிசயமென்றால் இங்குள்ள வெள்ளை மணல் திட்டுகளுக்கு இடையே தண்ணீர் தேங்கி இருக்கும் என்பதுதான்.

🏖 இந்த மணல் திட்டுகளுக்கு அடியில் பாறைகள் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

🏖 இந்த இடத்தில் காணப்படும் நீர் மிகவும் தெளிவாகவும், மழைக்காலங்களில் அதிகமான நீர் இங்கு தேங்கி அழகாகவும் காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

🏖 வெண்மையாக காணப்படும் இந்த மணல் திட்டுகளுக்கு இடையில் பச்சை மற்றும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரை பார்ப்பதற்கே அழகிய இடமாக காட்சியளிக்கிறது.

🏖 இந்த அழகான இடத்திற்கு அருகில் ஒரு கிராமமும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box