Unhelpful Friends


 Unhelpful Friends


A rabbit lived in the forest. He had many friends. He was proud of his friends. One day rabbit heard the loud barking of wild dogs. He was very scared. He decided to ask for help. He quickly went to his friend deer. He said, "Dear friend, some wild dogs are chasing me. Can you chase them away with your sharp antlers?'

The deer said, "That is right, I can. But now I am busy. Why don't you ask bear for help?" Rabbit ran to the bear. "My dear friend, you are very strong. Please help me. Some wild dogs are after me. Please chase them away", he requested to the bear.

The bear replied, "I am sorry. I am hungry and tired. Please ask the monkey for help". Poor rabbit went to the monkey, the elephant, the goat and all his other friends felt sad that nobody was ready to help him.

He understood that he had to think of a way out by himself. He hid under a bush. He lay very still. The wild dogs did not find the rabbit. They went chasing other animals. Rabbit learnt that he had to learn to survive by himself, not depending on his unhelpful friends.





உதவாத நண்பர்கள்

முயல் ஒன்று காட்டில் வாழ்ந்து வந்தது. அந்த முயலுக்கு பல நண்பர்கள் இருந்தார்கள். தன்னுடைய நண்பர்களை நினைத்து முயல் மிகவும் பெருமை அடைந்தது.

ஒரு நாள் காட்டு நாய்களின் உரத்த குரலின் சத்தத்தைக் கேட்டு, முயல் மிகவும் பயந்து கொண்டது. எனவே முயல் அதனுடைய நண்பர்களிடம் உதவி கேட்க முடிவு செய்தது. உடனே தன்னுடைய நண்பன் மானிடம் சென்று "அன்பு நண்பனே, சில காட்டு நாய்கள் என்னை துரத்துகின்றன. உங்களுடைய கூர்மையான கொம்புகளை வைத்து அவற்றைத் துரத்த முடியுமா?" என்று கேட்டது.

"நீ சொல்வது சரி தான், என்னால் முடியும். ஆனால் இப்போது நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். நீ ஏன் கரடியிடம் உதவி கேட்கக் கூடாது?" என்றது மான். முயல் கரடியிடம் ஓடிச்சென்று, "என் அருமை நண்பரே, நீங்கள் மிகவும் வலுவானவர். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். சில காட்டு நாய்கள் என்னை துரத்துகின்றன. தயவுசெய்து அவற்றைத் துரத்திவிடுங்கள்", என்று கரடியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.

"என்னை மன்னித்து விடு, நான் மிகவும் பசியாகவும் களைப்பாகவும் இருக்கிறேன். தயவுசெய்து குரங்கிடம் உதவி கேள்", என்று கரடி பதிலளித்தது.

முயல் குரங்கு, யானை, ஆடு மற்றும் அவரது மற்ற நண்பர்களிடம் சென்றது. ஆனால் யாரும் அதற்கு உதவ தயாராக இல்லை என்பத நினைத்து வருந்தியது.

தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு வழியை யோசிக்க வேண்டும் என்று அதற்கு புரிந்தது. ஒரு புதருக்கு அடியில் சென்று அமைதியாக படுத்துக் கொண்டது. காட்டு நாய்களால் முயலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மற்ற விலங்குகளை வேட்டையாட நாய்கள் சென்று விட்டன.

உதவாத நண்பர்களை சார்ந்திருக்காமல், நம்முடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முயலுக்கு புரிந்தது.

நீதி : மற்றவர்களை சார்ந்து இருப்பதை விட உங்களை நம்புவதே நல்லது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box