The Way to Victory

 


The Way to Victory


One day, some youths went to a jungle to practice shooting. They kept few pots at a distance and targeted them. None of them could hit even a single pot.

A man who was watching them started laughing. One of them went to him and asked, Why are you laughing? Do you know how to shoot?

At this, the man took the gun and fired at the pots and shooted all of them one by one. The youths were amazed to see this and asked the man if he was a magician.

The man replied, I am neither a magician nor a sharpshooter. I just concentrated and the result is in front of you. When one can do their work with concentration, they will surely succeed in it. The youths thanked him for the piece of advice.

Moral: Success is sure, if we do a work with Concentration.





வெற்றிக்கான வழி

இளைஞர்கள் ஒருமுறை துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்காக காட்டுக்குச் சென்றனர். அவர்கள் தூரத்தில் சில பானைகளை வைத்து அதனை சுடுவதற்காக குறி பார்த்தனர். ஆனால், அவர்களில் எவராலும் ஒரு பானையைக் கூடச் சுட முடியவில்லை.

அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு மனிதர் சிரிக்க ஆரம்பித்தார். இளைஞர்களில் ஒருவன் அவரிடம் சென்று, "ஏன் சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு எப்படி சுடுவதென்று தெரியுமா?" என்றான்.

அதற்கு அந்த மனிதர் துப்பாக்கியை எடுத்து பானைகளை ஒவ்வொன்றாக குறி பார்த்து அனைத்தையும் சுட்டார். இளைஞர்கள் அதைக் கண்டு வியப்படைந்து, நீங்கள் ஒரு மந்திரவாதியா என்று கேட்டனர்.

அதற்கு அவர், நான் மந்திரவாதியும் இல்லை, துப்பாக்கிச்சுட தெரிந்தவனும் இல்லை. நான் கவனத்துடன் ஒரு செயலை செய்தேன், அதனுடைய விளைவை நீங்களே பார்த்தீர்கள் அல்லவா! ஒருவர் கவனத்துடன் தங்களது வேலையைச் செய்யும்போது, அவர்கள் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று கூறினார். இளைஞர்களும் அவரின் அறிவுரைக்கு நன்றி கூறினர்.

நீதி: நாம் செய்யும் வேலையை கவனத்துடன் செய்தால் வெற்றி பெறலாம்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box