The Poor Man's Wealth

 


The Poor Man's Wealth


Ramchand and Premchand were neighbors. Ramchand was a poor farmer. Premchand was a rich person.

Ramchand used to be very happy. He never bothered to close the doors and windows of his house during night time. Although he had no money, he was peaceful.

Premchand used to be very tense always. He was very keen to close the doors and windows of his house at night. He could not sleep well. He was always bothered that someone might break open his safes and steal away his money. He envied the peaceful Ramchand.

One day, Premchand call Ramchand and gave him a boxful of cash and says, "Look my dear friend. I am blessed with plenty of wealth. I find you in poverty. So, take this cash and live in prosperity".

Ramchand was overwhelmingly happy. He was joyful throughout the day. Night came. Ramchand went to bed as usual. But, today, he could not sleep. He went and closed the doors and windows. He still could not sleep. He began to keep on looking at the box of cash. The whole night he was disturbed.

As soon as day broke, Ramchand took the box of cash to Premchand. He gave away the box to Premchand and saying, "Dear Friend, I am poor. But, your money took away peace from me. Please bear with me and take back your money".

Moral: Money cannot get everything. Learn to be satisfied with what you have and you will always be happy.





ஏழையின் செல்வம்

ராம்சந்தும் பிரேம்சந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். ராம்சந்த் ஒரு ஏழை விவசாயி, ஆனால் பிரேம்சந்தோ ஒரு பணக்காரர்.

ராம்சந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இரவு நேரங்களில் அவருடைய வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூட மூடாமல் இரவில் தூங்குவார். பணம் இல்லை என்றாலும் அவர் நிம்மதியாக இருந்தார்.

ஆனால் பிரேம்சந்தோ எப்பொழுதும் பதட்டமாகவே இருப்பார். இரவில் அவருடைய வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டு இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்படுவார், யாராவது தன் வீட்டை உடைத்துக்கொண்டு, பணத்தை எல்லாம் கொள்ளையடித்து விடுவார்களோ என்று எப்பொழுதும் எண்ணிக்கொண்டே இருப்பார். அவரால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. அவர் நிம்மதியாக இருந்த ராம்சந்தின் மீது பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள், பிரேம்சந்த் ராம்சந்தை அழைத்து, அவரிடம் ஒரு பெட்டி முழுவதும் பணத்தை கொடுத்து, "என் அன்பு நண்பரே. நான் நிறைய செல்வத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். நீ வறுமையில் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே, இந்த பணத்தை எடுத்துக்கொண்டு, செழிப்புடன் வாழ்" என்றார்.

ராம்சந்திற்கு மிகவும் மகிழ்ச்சி, அவர் அந்த நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருந்தார். இரவு நேரம் வந்தது. ராம்சந்த் வழக்கம் போல் படுக்கைக்குச் சென்றார். ஆனால் அவரால் தூங்க முடியவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து கதவையும் ஜன்னல்களையும் மூடினார். ஆனாலும் அவரால் தூங்க முடியவில்லை. அவரது கவனம் அந்த பணப் பெட்டியின் மீதே இருந்தது, இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் ராம்சந்த் பிரேம்சந்திடம் பணப் பெட்டியை எடுத்துச் சென்று, "அன்பு நண்பரே, நான் ஏழைதான். ஆனால், உங்களின் பணம் என்னிடம் இருந்த நிம்மதியை பறித்துவிட்டது. தயவு செய்து உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்", என்றார்.

நீதி : பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. உங்களிடம் இருப்பதை வைத்து திருப்தியுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box