மொராக்கி கற்பாறைகள்...!


விசித்திரமான.. மொராக்கி கற்பாறைகள்...!



👉 இந்த பூமியில் பல மர்மங்களும், இயற்கை அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

👉 அது போல கடற்கரையில் எண்ணற்ற வியக்கத்தக்க அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

👉 கடல் என்றாலே நம் மனதை பறிகொடுத்து விடுவோம். நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர், மற்றும் மணல்கள், பாறைகளைப் பார்த்து நாம் ரசித்தது உண்டு.

👉 ஆனால் இந்த கடற்கரையில் உள்ள பாறைகள் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... உண்மைதான் வாருங்கள் அதைப்பற்றி பார்க்கலாம்.


எங்கு அமைந்துள்ளது?

👉 இந்த கற்பாறைகள் நியூஷிலாந்தின் ஒடாகோ அருங்காட்சியகம் (otago museum) பகுதியில் உள்ள koekohe கடற்கரையில் அமைந்துள்ளன. இவை கண்கவர் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

👉 கடற்கரையில் அமைந்திருக்கும் கற்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. மேலும் சில கற்கள் முட்டை வடிவத்தில் இருக்கிறது.

👉 இந்த உருண்டை வடிவான கற்பாறைகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 2 மீட்டர் அளவில் 7 டன் எடை வரை இருக்கும். மேலும் சிறிய அளவிலான கற்கள் இங்கு அமைந்துள்ளது.

👉 இந்த கடற்கரை பகுதியில் கற்பாறைகள் அதிக அளவில் இருந்தன. ஆனால் இப்போது குறைந்த அளவில் மட்டுமே இந்தக் கற்கள் காணப்படுகின்றன.

👉 இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய கற்கள் அழகாக இருப்பதால் அதை உலகம் முழுவதும் வரும் சுற்றுலாப்பயணிகள் பலர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் இந்த கற்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

👉 பந்து போன்ற உருவான இந்த கற்களை உலகம் முழுவதும் அலங்கார பொருட்களாகவும் பயன்படுத்துகின்றனர்.

👉 ஒவ்வொரு வருடமும் இந்தக் கடற்கரையில் புதிய கற்கள் உருவாகின்றன. அந்த கற்கள் உருவாகும் போது ஆமைப் போன்று தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

👉 இவை கடலில் அடியில் இருக்கும் மங்கிய செடி, தழை போன்ற பல தாதுப் பொருள்கள் கடல் அலைகளின் காரணமாக ஒரு வண்டல் மண் உருவாகிறது. இந்த வண்டல் மண்கள் ஒன்றாகச் சேர்ந்து மொராக்கி கற்பாறைகளாக உருவாகின்றன.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story