நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!



நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!


👉 உலகில் பல அதிசயங்களும் மர்மங்களும் ஒன்றுக்கொன்று மிஞ்சும் அளவில் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் பல மாறுபட்ட நிகழ்வுகளும் நடந்துக் கொண்டேதான் உள்ளது.

👉 இந்த பூமியில் நடக்கும் சில இயற்கையான அதிசயங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நம்மை அச்சப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன.

👉 அவ்வாறு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத நமீபியாவின் மர்மமான வட்டங்களைப் பற்றி இன்று பார்க்கலாம்.

எங்கு அமைந்துள்ளது?

👉 ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற இடத்தில் வறண்ட பாலைவனங்களில் இந்த மர்மமான வட்டம் அமைந்துள்ளது.


👉 இவை நமீபியாவில் இருக்கும் ஒரு சுவராஸ்யமான புதர்நிலம் ஆகும். வறண்ட புட்கள் கொண்ட இந்த நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான வட்டங்கள் தானே உருவாகியுள்ளது.

👉 இந்த மர்மமான வட்டங்களை ஃபெயரி சர்க்கிள் (Fairy circle)என்று அழைக்கிறார்கள்.

👉 ஃபெயரி வட்டங்கள் விரிந்த தரையில் கனகச்சிதமாக உருவாகின்றன. இந்த வட்டத்தின் உட்புறத்தில் எந்த தாவரமும் முளைப்பதில்லை. மேலும் ஃபெயரி வட்டங்களின் உள்ளே இருக்கும் மணலுக்கும், வெளியே உள்ள மணலுக்கும் எந்த வேறுபாடு இருப்பதில்லை. ஃபெயரிக் வட்டங்களின் தோற்றங்கள் ஒரு மர்மமாகவே இன்னும் இருக்கிறது. அங்கு இருக்கும் மான்களும் இந்த வட்டத்தை தாண்டிச் செல்லாது.

👉 இந்த வட்டம் எப்படி உருவானது என்று தெரியாமல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.


Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

THE WIND AND THE SUN