விநோதமாகக் காட்சியளிக்கும்... சிலி பளிங்கு குகைகள்..!



விநோதமாகக் காட்சியளிக்கும்... சிலி பளிங்கு குகைகள்..!



✨ இந்த உலகில் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை என்று கூறலாம்.

✨ பூமியில் இயற்கையாகவே குகைகள் உருவாகின்றன. ஆனால் அந்த குகைகளுக்கு சென்றால் நமக்கு பயமாக இருக்கும்.

✨ ஆனால் இந்த குகையின் உள்ளே சென்றால் வெளியே வருவதற்கு மனமே இருக்காது என்று கூட சொல்லலாம். ஏன்? அந்தக் குகையில் அப்படி என்னத்தான் இருக்கும்.

✨ நமக்கு கொஞ்சம் புரியாத புதிராகவும் மற்றும் அதிசயமாகவும் இருக்கிறதல்லவா? வாருங்கள் நாம் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

எங்கு அமைந்துள்ளது இந்த அழகிய குகை?




✨ இயற்கை அற்புதங்களின் படைப்பாக இருக்கும் இந்த குகை சிலி மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் பேட்டகொனியா எனும் பகுதியில் அமைந்துள்ளது.


✨ குகையின் உட்புறத்தில் நீல நிற பாறைகள், அங்குள்ள ஏரியின் தண்ணீரில் விளையாடுவது போல நம் கண்களுக்கு அழகாக தோற்றமளிக்கும்.

✨ இந்த குகையின் அடிப்பாகத்தில் ஏரிகள் ஓடுகின்றன. அவற்றில் ஓடும் தண்ணீரின் நிறம் பச்சை மற்றும் நீல வண்ணங்களில் இருக்கின்றன. இவற்றின் பிரதிபலிப்பாலேயே இந்த குகை விநோதமாக நமக்கு காட்சியளிக்கிறது.

✨ கடலில் பயணம் செய்த பிறகு மட்டுமே இந்த குகையை சென்றடையலாம். இந்த பயணம் ஒரு நீண்டதாகவும் மற்றும் கடினமாகவும் இருக்கும்.




✨ பளிங்கு குகை பனிப்படலத்தால் ஆன ஒரு அரங்கம் போல் இருக்கும். பகல் நேரத்தில் இந்த இடத்திற்கு சென்றால் சூரிய ஒளியால் பளிங்கு குகை நம்முடைய கண்களைப் பறிக்கும் வகையில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

✨ கடல் அலைகளில் உள்ள உப்பு படலத்திலான குகைதான் பளிங்கு போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

✨ உப்புகளின் வௌ;வேறு பண்புகள் காரணமாக நிறம் மாறி மாறி பளிங்கு குகைகளாக தோற்றமளிக்கிறன.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story