இறப்பு ஏரி..!

 மனிதர்களை கரைத்து விடும்... இறப்பு ஏரி..!




👉 இந்த பூமியில் அதிசயம், ஆச்சரியம், அழகுகள் என்று ஏராளமான இயற்கை காட்சிகள் அமைந்துள்ளன. ஆனால், அவை உருவான விஷயங்களைக் கேட்டால்தான் நமக்கு கொஞ்சம் அச்சுறுத்தும் விதத்தில் இருக்கும்.

👉 நம் உலகம் ஆச்சரியமாகவும், அழகாகவும் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

👉 ஒரு சில இயற்கை நிகழ்வுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்றே கூறலாம்.

👉 ஏரி என்று சொன்னாலே ஓய்வெடுக்க அழகான இடம், ஆனந்தமாக எல்லோருடன் சேர்ந்து குளித்து மகிழ்வது, மீன் பிடிப்பது போன்றவைத்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில ஏரிகள் திகில் நிறைந்த ஏரிகளாகவும் உள்ளன.

👉 அந்த வகையில் மனிதர்களை அச்சத்தில் நடுங்க வைக்கும் இறப்பு ஏரியைப் பற்றி பார்க்கலாம்.

எங்கு அமைந்துள்ளது?

👉 இத்தாலியில் சிசிலி தீவில்தான் இந்த மர்மான மனிதர்களை பயமுறுத்தும் இறப்பு ஏரி அமைந்துள்ளது.

👉 மிகவும் ஆபத்தான எரிகளில் ஒன்றாக இந்த ஏரி கருதப்படுகிறது. இந்த ஏரியில் ஏதாவது உயிரினங்கள் தவிர்க்க முடியாத நிலையில் விழுந்துவிட்டால் அவை அழிந்துவிடும்.

👉 இந்த ஏரியில் எந்த உயிரினங்களும் இல்லை. இறப்பு ஏரியின் கரைப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படும். இதனை சுற்றி மரங்கள், செடிகள் என எதுவும் வளருவதில்லை.

👉 மனிதர்கள் இந்த ஏரி நீரில் நீந்துவதற்கு முடிவு செய்தால், சில நிமிடங்களில் அவர்கள் கரைந்து இறந்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.

👉 இறப்பு ஏரியில் மனிதர்கள் இறப்பதற்கும், மரங்கள், செடிகள் வளருவதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

👉 விஞ்ஞானிகள் இந்த ஏரியை ஆய்வு செய்தபோது நீர்வாழ் சூழலில் அதிக அளவு செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் வெளிவருவதால் இவ்வாறு நடக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story