பாலைவன ஏரி !!

 அதிசய வைக்கும்... பாலைவன ஏரி !!



🏜 நாம் வாழும் இந்த அழகான பூமியில் பலபல அதிசயங்கள் நாம் எள்ளளவும் நம்ப முடியாத வகையில் ஏற்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

🏜 பாலைவனம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது வெயிலும், மணலும்தான். மேலும் நீர் கிடைக்கவே அரிதான இடமாகவும் இது காணப்படுகிறது.

🏜 மேலும் சாதாரணமாக உள்ள ஏரியில் திடீரென்று ஒரு ஏரி உருவானால் எவ்வளவு ஆச்சரியம் மற்றும் எண்ணற்ற கேள்விகளும் நமக்கு எழுகிறதல்லவா?

🏜 ஆம்... உண்மைதான்... மணலும், வெயிலும் நிறைந்த ஒரு பாலைவனத்தில் திடீரென உருவான ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

🏜 துனிசிய (Tunisia) நாட்டில் அமைந்துள்ள பாலைவனத்தில் இந்த மர்மமான (Mysterious Lake) ஏரி அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியை Lac de Gafsa எனவும் அழைக்கின்றனர்.


🏜 இந்த ஏரி பாலைவனத்தில் திடீரென தோன்றியதாகும். இந்த ஏரி தோன்றுவதற்கு முன்னால் அந்த இடமானது பாலைவன மணல்களால் சூழ்ந்துள்ளது.

🏜 எப்படி? எதனால்? இந்த இடத்தில் ஏரி தோன்றியது என யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

🏜 பாலைவன மணல்களுக்கு இடையில் தோன்றிய ஏரி அனைவரையும் அதிசயிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

🏜 மேலும் இந்த ஏரியில் உள்ள நீர் மிகவும் தெளிவாக உள்ளதாக கூறப்படுகிறது.

🏜 இந்த ஏரி தோன்றியவுடன் அனைவரும் இந்த அதிசயமான நிகழ்வை காண அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வர தொடங்கிவிட்டனர்.

🏜 அவர்கள் அந்த ஏரியில் குளித்தும் மகிழ்கின்றனர். ஆனால் இந்த ஏரி திடீரென தோன்றியதாலும், அதில் பல மினரல்ஸ் கலந்து இருப்பதாலும் இதில் யாரும் குளிக்க வேண்டாம் என அரசு கூறினாலும் மக்கள் இதில் குளிக்காமல் இருப்பதை நிறுத்தவில்லை...


🏜 இந்த ஏரி எப்படி உருவாகி இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் இந்த ஏரி உருவான இடத்தில் நீர் உருவாவதற்கான அமைப்புகள் இருந்திருக்கலாம் எனவும், அதனால் கூட இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

🏜 மேலும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் பாறைகள் நகர்ந்து நீர் மேலே வந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

🏜 ஆனால் இந்த ஏரி எப்படி உருவானது என்று யாராலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

🏜 இயற்கையின் நிகழ்வுகளுக்கு நம்மால் இன்று வரை எந்த தீர்வும் கண்டுபிடிக்க முடியவில்லை... அப்படியே கண்டுபிடித்தாலும் அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது கேள்வியாகவேதான் உள்ளது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story