மர்மமான காடுகள் !!

மர்மமான காடுகள் !!



🗿 பொதுவாக காடுகள் என்பது நம்மை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

🗿 மேலும் அடர்ந்த, பசுமை நிறைந்த இந்த காடுகள் பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது...

🗿 காடுகளில் பசுமை மாறாக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள், முட்புதர் காடுகள் என பலவகைகள் உள்ளன.

🗿 காடுகள் எப்போதும் தனக்குள்ளே பல ரகசியங்களை வைத்திருக்கும்...

🗿 காடுகளில் நமக்கு பெயர் தெரியாத மிருகங்கள், ஊர்வன, பறவைகள் என ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

🗿 அவற்றில் பல நம் உயிரை கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது.

🗿 இது போல மர்மங்கள் நிறைந்த காடுகளும் நம் உலகில் உள்ளன. அந்த வகையில் மர்மமான காடுகளில் ஒன்றை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.


🗿 காடுகளில் நமக்கு தெரியாமல் பல அதிசயங்களும், மர்மமான விஷயங்களும் உள்ளன.

🗿 அவற்றில் ஒன்றுதான் வட்ட வடிவில் அமைந்துள்ள கற்கள். அவை மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் தோன்றும் வகையில் அமைந்துள்ளது.

🗿 இங்கிலாந்தில் உள்ள ஸ்டென்டன் மோர் (Stanton Moor) என்ற காடுகளில்தான் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு இடம் உள்ளது.

🗿 இந்த கல் வட்டங்கள் பலங்காலத்தில் இருந்தே காணப்படுவதாக கூறப்படுகிறது.

🗿 இவை எப்படி இங்கு வந்தன... இயற்கையாக அமைந்ததா... யாரால் வடிவமைக்கப்பட்டது... எதற்காக வடிவமைக்கப்பட்டது என்ற கேள்விகள் ஏராளம் எழும் வகையில் அமைந்துள்ளது.

🗿 ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்று வரையும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.


🗿 இந்த கல்வட்டங்கள் ஒன்பது கற்களால் அமைந்துள்ளது. அந்த கற்கள் அனைத்தும் வௌ;வேறு வடிவில் காணப்படுகிறது.

🗿 இதை ஆங்கிலத்தில் nine Ladies stone circle என அழைக்கின்றனர். ஒவ்வொரு கற்களும் சிறிது இடைவெளியுடன் காணப்படுகிறது.

🗿 இயற்கையாய் அமைந்த காடுகளில் இன்னும் நமக்கு தெரியாத அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன.

🗿 என்னதான் ஆராய்ச்சியாளர்கள் புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு நிகராக மாற முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்....

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story