வியப்பூட்டும்.. இதய வடிவ ஏரி..!




வியப்பூட்டும்.. இதய வடிவ ஏரி..!



💕 இந்த பூமியில் எண்ணற்ற அதிசயமான மற்றும் மர்மமான நிகழ்வுகள் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.

💕 உலகில் இயற்கையாகவே உருவான வியக்கத்தக்க இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை நம் நேரில் பார்த்தால் கற்பனையா? அல்லது நிஜமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும்.

💕 இதய வடிவத்தில் ஏரி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான் இந்த ஏரியைப் பார்த்தால் நமக்கு அதிசயமாக இருக்கும். இப்படி கூட ஏரி இருக்குமா? என்று நமக்கு புரியாத சந்தேகம் உருவாகும் என்று கூட சொல்லலாம்.

💕 நாம் இன்று ஒரு புதியதாக தோற்றமளிக்கும் வியக்கத்தக்க இதய வடிவ ஏரி பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இதய வடிவ ஏரி :

💕 இதய வடிவ ஏரி கேரளாவில் பசுமை நிறைந்த செம்பரா மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

💕 இந்த மலைப்பகுதியில் பெரிய பாறைகளைக் கடந்து சென்றால் இந்த அழகிய இதய வடிவ ஏரியை அடையமுடியும். இதை இதயத் தாடகம் என்றும் அழைப்பார்கள்.


💕 பசுமையான மலைகளின் உச்சியில் இருந்து இந்த இதய வடிவ ஏரியைப் பார்த்தால் நம்முடைய உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக அழகாக காட்சியளிக்கும்.

💕 இதய வடிவ ஏரியை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

💕 இந்த ஏரியை பார்ப்பவர்கள் தம் இதயங்களை பறிகொடுக்கும் அளவிற்கு இதய வடிவ ஏரி அமைந்துள்ளது.

💕 நம் மனதை மயக்கும் இந்த ஏரியை அருகில் இருந்து பார்ப்பதை விட மலையின் உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை அளிக்கும்.

இதய வடிவத்தில் இருப்பதற்கான காராணம் :

💕 இவை இயற்கையாக அமைந்த ஒரு இதய வடிவத்தில் அமைந்திருக்கும் ஏரி ஆகும். இந்த ஏரியில் எப்போதும் நீர் வற்றாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story