அழகாக காட்சியளிக்கும்.. சிவப்பு கடல்..!




 அழகாக காட்சியளிக்கும்.. சிவப்பு கடல்..!



🌟 இயற்கை வளங்களைப் பார்த்தாலே மனிதர்கள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறலாம்.

🌟 ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் வித்தியாசமாகவும், அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் நமக்கு தோற்றமளிக்கும்.

🌟 அதுபோல கடலில் இருக்கும் இயற்கை காட்சிகள் ஏராளம் என்று கூறலாம். பொதுவாக கடலில் இருக்கும் நீர் நீல வண்ணத்தில்தான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

🌟 ஆனால், இந்த கடல் பார்பதற்கு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். இன்று நாம் அந்த அதிசயமான கடலைப் பற்றி பார்க்கலாம்.

எங்கே இருக்கிறது இந்த சிவப்பு கடல்?

🌟 சீனாவில் பஞ்சின் என்ற இடத்தில் இயற்கையை ஈர்க்கக்கூடிய மற்றும் புகழ் வாய்ந்த இடமாக திகழ்கிறது இந்த சிவப்பு கடல்.

🌟 இந்த ஆழமற்ற கடல் ஒரு சிவப்பு புல் பேரினம் ஆகும். இவை ஆழமற்றதாகவும், அலையுள்ள நிலப்பகுதிகளாகவும் தோற்றங்களை ஏற்படுத்துகின்றன.

🌟 இது ஒரு பெரிய நிலங்களிலும், கோரைப்புல்களான (பாசி) தண்ணீரோடு கலந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.


🌟 இதன் அதிசயம் என்னவென்றால் கடலில் உள்ள நீர் சிவப்பாக இருப்பதில்லை. அதன் மீது இருக்கும் இந்தக் கோரைபுற்கள் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறி நாம் பார்ப்பதற்கு ஒரு சிவப்புக் கடலாக காட்சியளிக்கிறது.

🌟 சிவப்பு கடல் எல்லா கடல்களை போலவே காட்சியளிக்கும். ஆனால் குறிப்பிட்ட மாதத்தில் பச்சையாக இருக்கும் கோரைப் புற்கள், சில மாதங்களுக்கு பிறகு அடர் சிவப்பு வண்ணமாக மாறி உலகின் அழகிய கடற்கரையாகவும் நமக்கு காட்சியளிக்கும்.

🌟 பிறகு அடர் சிவப்பிலிருந்து, இளஞ்சிவப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகின்றன. சில மாதங்களில் அந்த கோரைப்புல் மீண்டும் முளைக்கிறது.


ஏன் இந்தக் கடல் சிவப்பாக இருக்கிறது?

🌟 அதற்கு காரணம் இயற்கையாகவே கோரைப்புல் சிவப்பாக மாறிவிடும் மற்றும் அந்தக் கடலில் உள்ள உப்பு, காரத்தன்மையின் காரணமாக சிவப்பு நிறத்தை தருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

🌟 தனித்துவம் வாய்ந்த இந்த அழகிய கடற்கரையை மிக கவனமாக பாதுகாத்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பாலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story