வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீருற்று..!




 வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீருற்று..!



🌈 இந்த உலகில் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் அதிசயங்கள் நமக்கு ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் அவை எப்படி உருவாகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அந்த அழகாக இருக்கும் அதிசயங்களும் ஆபத்தை ஏற்படுத்தும்.

🌈 மழைக்காலங்களில் வானில் தோன்றும் வானவில்லைப் பார்த்து நாம் ரசித்தது உண்டு. அதன் வண்ணத்தைப் பார்க்கும்போது நம் கண்களை கவர்ந்திழுக்கும்.

🌈 நீருற்றுகள் பொதுவாக குளிர்ச்சியாகவும், அதிலுள்ள தண்ணீர்கள் நீலநிறத்தில்தான் காட்சியளிக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

🌈 ஆனால் இந்த நீருற்றில் உள்ள தண்ணீர் கொதிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். இந்த அதிசயமான நீருற்றில் வானவில் நிறத்தில் தண்ணீர் காட்சியளிப்பதை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

எங்கே அமைந்துள்ளது?

🌈 இந்த மிகப்பெரிய வெப்ப நீருற்று அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellowstone National Park) கிராண்ட் பிரிஸ்மாடிக் (Grand Prismatic) என்ற இடத்தில் அமைந்துள்ளது.

🌈 இந்த நீருற்றை கொதிக்கும் வெப்ப நீருற்று என்று கூட சொல்லலாம். ஏனென்றால், அவை எப்போதும் அதிகமான வெப்பத்தைக் கொண்டிருக்கும்.

🌈 சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை காண்பதற்கு ஆர்வமாகச் செல்கின்றனர். இந்தப் பகுதி ஓர் அரிதான இடமாகவும் விளங்குகிறது.


🌈 இதனை சுற்றியுள்ள இடங்கள் வானவில் நிறத்தை பிரதிபலிக்கும்படி நமக்கு அழகாக காட்சியளிக்கும். நீலம், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என்ற நிறங்களில் வண்ணமயமாக நமக்கு தோற்றமளிக்கும்.

🌈 வெப்ப நீருற்றை சுற்றியுள்ள நிலப்பகுதி ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களிலும், நீர்ப்பரப்பின் நடுப்பகுதி அடர் நீலநிறத்தில் காணப்படும்.

🌈 கோடை மற்றும் குளிர்காலங்களின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து நீருற்றின் நிறம் மாறுதல் அடையும். அதிக மேகமூட்டமில்லாத நிலையிலும் இவை வண்ணமயமாக காட்சியளிக்கும்.

🌈 இவை தொடர்ச்சியாக நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கும்.

🌈 சுற்றுலாப் பயணிகள் இந்த நீருற்றைப் பாதுகாப்பாக கண்டுகளிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

🌈 இவை மக்களால் விரும்பக்கூடிய அழகான வெப்ப நீருற்றாகவும் இருக்கிறது.

வெப்ப நீருற்று உருவான விதம் :

🌈 பூமியின் அடியில் நிலவும் வெப்பத்தின் காரணமாக இந்த அரிதான வெப்ப நீருற்றுகள் உருவாகின்றன. இந்த வெப்ப நீருற்றுகள் சில மக்கள் பயன்படுத்தும் வகையில் அழகாக இருக்கும். உயர் வெப்பத்தினால் இந்த நீருற்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story