மனிதனை அச்சத்தில் உறைய வைத்த... க்ரூய்நார்ட் தீவு..!




மனிதனை அச்சத்தில் உறைய வைத்த... க்ரூய்நார்ட் தீவு..!



😮 நாம் வாழும் இந்த பூமியில் அதிகமான அதிசயங்களும், மர்மங்களும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்து இருக்கிறது என்றால் மிகையாகாது.

😮 இந்த வியக்கத்தக்க இடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்தால் உண்மையில் இப்படி இருக்கிறதா என்று நமக்குள் ஒரு புரியாத புதிர் உண்டாகும்.

😮 அந்த வகையில் மனிதர்கள் இந்த தீவிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். என்ன காரணமாக இருக்கும்? வாருங்கள் அந்த தீவில் உள்ள மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்.

க்ரூய்நார்ட் தீவு :

😮 மனிதர்களை அச்சத்தில் உறைய வைக்கும் இந்த தீவு ஸ்காட்லாந்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

😮 க்ரூய்நார்ட் தீவு ஓவல் வடிவத்தில் அமைந்திருக்கும். இங்கு செல்வதற்கு அனுமதி இருக்கும் நிலையிலும் மனிதர்கள் யாரும் செல்வதில்லை.


😮 அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த தீவிற்கு மனிதர்கள் செல்வதற்கு தைரியம் இல்லை என்பதுதான் உண்மை.

😮 இந்த தீவு உலகப்போரின் போது, ராணுவ ஆராய்ச்சியாளர்கள் ரசாயன ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்த இடமாக கூறப்படுகிறது.

😮 க்ரூய்நார்ட் தீவில் வீரியம் மிக்க ஆந்தராக்ஸ் பரிசோதனை செய்த பிறகு அந்த இடமே ரசாயன தீவாக மாறியது.

😮 இந்த சோதனை மூலம்தான் அந்த தீவானது பாழாய்போனது என்று சொல்கிறார்கள்.

😮 இங்கு பல ஆடுகளைக் கொண்டு வந்து பல சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

😮 பல ஆய்வுகள் செய்த பின்பு இந்த தீவு மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் என்று அரசு உத்தரவிட்டப் பிறகு மனிதர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு நடுங்குகின்றனர் என்பதால் இது மர்மத் தீவாகவே இருக்கிறது.

😮 சோதனைகள் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் க்ரூய்நார்ட் தீவு அச்சம் நிறைந்த இடமாகவே திகழ்ந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story